/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கம் வென்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் மாணவர்கள்
/
தங்கம் வென்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் மாணவர்கள்
ADDED : செப் 19, 2024 11:04 PM

கோவை: சென்னையில் நடந்த சி.பி.எஸ்.இ., கிளஸ்டர்ஸ் அதலெடிக் போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவர் இருவர் தங்கம் வென்றுள்ளனர்.
சென்னை, அரக்கோணத்தில் உள்ள அம்பாரி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் கடந்த, 15 முதல், 18ம் தேதி வரை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான 'கிளஸ்டர்ஸ் அதலெடிக்-2024' போட்டிகள் நடந்தன.
இதில், மாணவர்களுக்கான, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் பிளஸ்2 பயிலும், வீர வித்யாகரன் ஈட்டி எறிதலிலும், கிஷோர் குமார் குண்டு எறிதல் போட்டியிலும் தங்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளி தாளாளர் கவிதாசன், நிர்வாக அறங்காவலர் ராமசாமி, முதல்வர் உமா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.