/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகில இந்திய ஹாக்கி போட்டி சச்சிதானந்த பள்ளி இரண்டாமிடம்
/
அகில இந்திய ஹாக்கி போட்டி சச்சிதானந்த பள்ளி இரண்டாமிடம்
அகில இந்திய ஹாக்கி போட்டி சச்சிதானந்த பள்ளி இரண்டாமிடம்
அகில இந்திய ஹாக்கி போட்டி சச்சிதானந்த பள்ளி இரண்டாமிடம்
ADDED : அக் 21, 2025 12:57 AM

மேட்டுப்பாளையம்: அகில இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ., ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள், போபால் ஓரியண்டல் பப்ளிக் பள்ளியில் நடந்தது. தென் மண்டல அளவில், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்ற, மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி மாணவர் அணியினர் பங்கேற்றனர்.
லீக் போட்டிகளில் இப்பள்ளி அணி, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளி அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்றது. அரையிறுதிப் போட்டியில் ராம்பூர் சன்வே பள்ளியை வென்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அம்ரிதசரஸ் கால்ஷா அகாடமி பள்ளி அணியுடன் இறுதி போட்டியில் மோதி, வெற்றி வாய்ப்பை இழந்து, இரண்டாம் இடத்தை பெற்றது.
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியை சேர்ந்த, 14, 19 வயதிற்கு உட்பட்ட மாணவர் அணியினர் அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பெற்றனர்.
இரண்டாம் இடம் பிடித்த சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவர்களுக்கு, போபால் தொகுதி எம்.பி., அலோக் ஷர்மாஜீ பரிசு கோப்பையை வழங்கினார்.
இரண்டாம் இடம் பெற்ற பள்ளி மாணவர்களை, பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலர் கவிதாசன், ரூட்ஸ் குழும நிறுவனங்களின் தலைமை நிதித்துறை அதிகாரி ரவி ஆகியோர் பாராட்டினர்.
மேலும் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், உடற்கல்வித்துறை துணை இயக்குனர் அனிதா, ஹாக்கி பயிற்சியாளர் யோகானந்த் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.