/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு; '1512' க்கு போன் பண்ணுங்க
/
ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு; '1512' க்கு போன் பண்ணுங்க
ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு; '1512' க்கு போன் பண்ணுங்க
ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு; '1512' க்கு போன் பண்ணுங்க
ADDED : பிப் 11, 2025 11:52 PM

மேட்டுப்பாளையம்; ''ரயிலில் பயணம் செய்யும், பெண் பயணிகள் தங்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் போது, 1512 என்ற நம்பருக்கு போன் செய்தால், அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் போலீசார், உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பர்'' என, ரயில்வே போலீசார் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ரயில்வே போலீசார் ரயில் பயணிகள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
கோவை ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பாபு, இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரயிலில் பயணம் செய்த பெண்களிடம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள், தங்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், ரயில்வே போலீஸ் உதவிக்கு, 1512, 99625 00500என்ற நம்பருக்கு அழைத்தால், அடுத்த ரயில் ஸ்டேஷனில் போலீசார் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பர்.
அறிமுகம் இல்லாத சந்தேகப்படும் நபராக இருந்தால், உடனடியாக இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும், ஒவ்வொரு பெட்டியிலும் பாதுகாப்பு குறித்த போன் நம்பர்கள் உள்ள ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்லும், மெமு பாசஞ்சர் ரயில், ஊட்டி மலை ரயில், நீலகிரி எக்ஸ்பிரஸ், துாத்துக்குடி வாராந்திர ரயில் ஆகிய ரயில் பெட்டிகளில், இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி, பெண்கள் மத்தியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.