/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது
/
சக்தி மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது
ADDED : ஏப் 24, 2025 11:10 PM
கோவில்பாளையம்,; சக்தி மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது.
கோவில்பாளையத்தின் காவல் தெய்வமான ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது.
இரவு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால், சக்தி மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சக்தி மாரியம்மன் அருள் பாலித்தார். இதையடுத்து அம்மனுக்கு பொரிச்சாட்டு நடந்தது. இதில் விழா குழு தலைவர் நாகராஜன், செயலாளர் சுப்பையன், பொருளாளர் செந்தில் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
வரும் 29ம் தேதி வரை தினமும் இரவு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வரும் 30ம் தேதி கம்பம் நடப்படுகிறது.
இதையடுத்து வரும் மே 8ம் தேதி அம்மனுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்திதேர் இழுத்தல், சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.