ADDED : அக் 03, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில், நேற்று சட்டவிரோத மதுபானம் விற்பனையை தடுக்க, போலீசார் ரோந்து சென்றனர். கோபாலபுரம் டாஸ்மாக் கடை அருகே, 380 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, தேனியை சேர்ந்த சூர்யா,25, திருப்பூர் பெருமாநல்லுார் பூமிநாதன்,43, ஆகியோரை கைது செய்தனர்.
மாக்கினாம்பட்டியில் தனிப்பிரிவு போலீசார், மற்றும் கிழக்கு போலீசார் ரோந்து சென்று, நேருநகரில் மது விற்ற கமலம்,65, செல்வம்,49 ஆகியோரை கைது செய்து, 262 மதுபாட்டில்கள் மற்றும், 7,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். கோலார்பட்டியில் மது விற்ற காளிமுத்து,37, என்பவரை கைது செய்து, 114 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.