/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5.54 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனை
/
5.54 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனை
ADDED : டிச 12, 2025 05:21 AM
அன்னுார்: அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாராந்திர ஏல விற்பனை நடந்தது.
தேங்காய் ஒரு கிலோ குறைந்தது 52 ரூபாய் முதல், அதிகபட்சம் 66 ரூபாய் 66 பைசா வரை விற்பனையானது. தேங்காய் கொப்பரை 40 மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந் தன. ஒரு கிலோ குறைந்தபட்சம். 132 ரூபாய் 55 பைசா முதல், அதிகபட்சம் 223 ரூபாய்க்கு விற்பனையானது.
தேங்காய் தொட்டி, ஒரு கிலோ 29 ரூபாய் 39 பைசா வீதம் விற்பனையானது. 44 விவசாயிகளும், 14 வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். 5 லட்சத்து 54 ஆயிரத்து 374 ரூபாய் மதிப்புக்கு பொருட்கள் விற்பனையானது.
இத்தகவலை, கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன், விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தனர்.

