/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ-நாமில் ரூ.1.14 கோடிக்கு விளை பொருட்கள் விற்பனை
/
இ-நாமில் ரூ.1.14 கோடிக்கு விளை பொருட்கள் விற்பனை
ADDED : அக் 30, 2024 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலாக, விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை, தக்காளி, மரவள்ளி, வாழைக்காய் போன்ற, 1,806டன் விளைபொருட்கள், 'இ-நாம்' ஏல முறையில், 1.14கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதன் வாயிலாக, 57 விவசாயிகள் மற்றும்283வியாபாரிகள்பயனடைந்தனர்.
மேலும், விற்பனை கூடத்தில்,95விவசாயிகளுக்கு,4.46கோடி ரூபாய் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.