/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் நாற்றுகள் விற்பனை..
/
மானிய விலையில் நாற்றுகள் விற்பனை..
ADDED : பிப் 05, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில், நான்கு வகை நாற்றுகள் வழங்கப்படுகின்றன.
சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரி கூறுகையில், மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் நாற்றுகள் வழங்கப் படுகின்றன. வாழைக்கன்று (கிழங்கு), கருவேப்பிலை நாற்று, பப்பாளி நாற்று, முருங்கை நாற்று ஆகியவை வழங்கப் படுகின்றன. நாற்றுகள் தேவைப்படுவோர், ஆதார் நகலுடன் சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை, அணுகி பயன் பெறலாம், என்றார்.