ADDED : ஜூன் 06, 2026 03:38 AM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி கணேசன் தலைமையிலான குழு, மேட்டுப்பாளையம் சாலை, சிந்தாமணி, திருச்சி சாலை சுங்கம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த மூன்று லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டன.
திருச்சி சாலையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிய நிலையில், விசாரணைக்கு பின், போலீசார் செட்டிபாளையம் சூர்யா, 28 என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
