/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர் வருகை; திடீர் ஆய்வு செய்த கமிஷனர்
/
துாய்மை பணியாளர் வருகை; திடீர் ஆய்வு செய்த கமிஷனர்
துாய்மை பணியாளர் வருகை; திடீர் ஆய்வு செய்த கமிஷனர்
துாய்மை பணியாளர் வருகை; திடீர் ஆய்வு செய்த கமிஷனர்
ADDED : ஜூலை 09, 2025 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி மேற்கு மண்டலம், 42வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று காலை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் திடீர் ஆய்வு செய்தார்.
அங்குள்ள துாய்மை பணியாளர் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த அவர், சரியான நேரத்துக்கு துாய்மை பணியாளர்கள் வருகிறார்களா என அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 'பயோமெட்ரிக்' வருகை பதிவேட்டினையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வேலாண்டிபாளையம், வ.உ.சி., நகரில் குப்பையை தரம் பிரித்து சேகரித்து, குப்பை மேலாண்மைக்கு எளிமையாக்க, துாய்மை பணியாளர்களை அறிவுறுத்தினார்.