இளநிலை உதவியாளர்கள் பதவிக்கு தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
இளநிலை உதவியாளர்கள் பதவிக்கு தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
ADDED : ஆக 23, 2026 04:11 PM
கோவை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மாநகராட்சியில் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள், கடந்த 14ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
காலியாகியுள்ள 54 இளநிலை உதவியாளர் பணியிடங்களை எப்படி நிரப்புவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம் பொதுச்செயலர் செல்வம் கூறுகையில், ‘‘அ.தி.மு.க. ஆட்சியில் 325 பேர் துாய்மை பணிக்கு எடுக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அலுவலக பணியை கவனிக்கின்றனர். அவர்களை வைத்து காலியாகியுள்ள 54 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி முயற்சிக்கிறது.
2007 முதல் 2011 வரை துாய்மை மற்றும் இதர பணிக்கு எடுத்தவர்கள் பதவி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். விதிகள்படி 10வது தேர்ச்சி பெற்ற அனைவருமே இளநிலை உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள். எனவே சீனியாரிட்டிபடி பதவி உயர்வுக்காக காத்திருப்போருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், என்றார்.
