தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்


UPDATED : அக் 08, 2026 06:26 PM

ADDED : அக் 08, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 06:26 PM ADDED : அக் 08, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில், 140 தனியார் ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் சம்பளம் கொடுக்கிறது. 2024ம் ஆண்டு சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப்., தொகையை இன்னும் பணியாளர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை. பலமுறை போராட்டம் செய்தும் பயன் இல்லாததால், துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற் சங்கத்துடன் இணைந்து, மேட்டுப்பாளையம் நகராட்சியில், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், கடந்த 5ம் தேதியில் இருந்து, தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரில் தூய்மைப் பணிகள் பாதிப்படைந்தன.

நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) வாசுதேவன், தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், தனியார் ஒப்பந்ததாரர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நகராட்சி சார்பில் பி.எப்., தொகை வழங்கியதற்கான சான்றிதழை காண்பித்தார். இதையடுத்து, தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்று, நேற்று முதல் வேலைக்கு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us