/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி அலுவலகத்தை துாய்மைப் பணியாளர்கள் முற்றுகை
/
நகராட்சி அலுவலகத்தை துாய்மைப் பணியாளர்கள் முற்றுகை
நகராட்சி அலுவலகத்தை துாய்மைப் பணியாளர்கள் முற்றுகை
நகராட்சி அலுவலகத்தை துாய்மைப் பணியாளர்கள் முற்றுகை
ADDED : டிச 15, 2024 11:40 PM

மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் நகராட்சி ஒப்பந்த துாய்மைப் பணியாளருக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து, பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33வார்டு பகுதிகளிலும், குப்பைகளை அகற்ற ஒப்பந்த அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல், காலம் தாழ்த்தப்படுகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறி, துாய்மைப் பணியாளர்கள் நேற்று மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இன்று (திங்கட்கிழமை) ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.-----