ADDED : டிச 08, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காந்திபுரம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, காந்திபுரம் ஜி.பி. தியேட்டர் அருகே உள்ள புனித லுார்து போரேன் தேவாலயத்தில், 'கிறிஸ்து ஜெயந்தி ஜூபிலி-2025' கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக , 'சாண்டா கிளாஸ்' வேடமணிந்த கிறிஸ்தவர்கள் நடனம் ஆடியபடி ஊர்வலமாக சென்றனர்.
தேவாலயத்தில் துவங்கிய ஊர்வலமானது காந்திபுரம் சிக்னல், கிராஸ்கட் ரோடு, 10ம் நம்பர் வீதி வழியாக, 100 அடி ரோட்டை அடைந்து மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. 1,000க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து இயேசுவின் பாடல் பாடியும், நடனம் ஆடியவாறும் கொண்டாடினர்.

