/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மகிழ் முற்றம்' சார்பில் மரக்கன்று நடும் விழா
/
'மகிழ் முற்றம்' சார்பில் மரக்கன்று நடும் விழா
ADDED : டிச 09, 2024 07:50 AM

வால்பாறை: உலக மண் தினத்தை முன்னிட்டு, 'மகிழ் முற்றம்' அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த மாதம் முதல் 'மகிழ் முற்றம்' எனும் மாணவர் அமைப்பு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், உலக மண் தினத்தை முன்னிட்டு, 'மகிழ் முற்றம்' மாணவர்கள் அமைப்பின் சார்பில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில், 'மண்ணையும், இயற்கையையும் பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் மாணவ, மாணவியர் பேசினர். மாணவர் அமைப்பின் தலைவர்கள் (ஆசிரியர்கள்) டெய்சிலீமா, கவுரி, சுப்புராஜ், வசந்த், தனபாக்கியம் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.