/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரமணிய சுவாமி கோவில்களில் சஷ்டி பூஜை
/
சுப்ரமணிய சுவாமி கோவில்களில் சஷ்டி பூஜை
ADDED : பிப் 18, 2025 09:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சஷ்டி பூஜையை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு, பால், பன்னீர், இளநீர், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி, வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.