/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் சாஸ்தாப்ரீதி நிகழ்ச்சி
/
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் சாஸ்தாப்ரீதி நிகழ்ச்சி
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் சாஸ்தாப்ரீதி நிகழ்ச்சி
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் சாஸ்தாப்ரீதி நிகழ்ச்சி
ADDED : மார் 04, 2024 12:50 AM

கோவை:கோவை ராம்நகர் சத்திய மூர்த்தி சாலையில் அமைந்துள்ள, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க ஆண்டு விழா சிறப்பாக நடந்து முடிந்ததற்காக, நன்றி தெரிவிக்கும் வகையில், புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் பக்த கோஷ்டிகளின் சாஸ்தாப்ரீதி நிகழ்ச்சியும், நேற்று நடந்தது.
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், சாஸ்தாப்ரீதி நிகழ்ச்சி நேற்று காலை 9:30 மணிக்கு, தேவதா ஆவாஹனத்துடன் துவங்கியது. ஐயப்பசுவாமிக்கு மாலைகள் அணிவித்து, விளக்கேற்றி ஆவாஹனம் செய்யப்பட்டது.
பூதநாதனுக்கு வடமாலை சார்த்தி, விளக்கேற்றி ஆவாஹனம் செய்யப்பட்டது. ஐயப்பசுவாமிக்கும் பூதநாதனுக்கும் இடையே, இரண்டு விளக்குகள் ஏற்றி, சிறப்பு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது.
செங்கோட்டை ஹரிஹர சுப்ரமணிய பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. கணபதி, முருகன், சிவபெருமான், மஹாவிஷ்ணு, அம்பாள், ஆண்டாள், ராமரை துதித்து பாடல்களை பாடினர்.
தொடர்ந்து, ஸ்ரீ ஐயப்பன் பாடல்களை பாடி, நிறைவாக ஆஞ்சநேயர் பாடல்களோடு நாமசங்கீர்த்தனத்தை நிறைவு செய்தனர். ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு மலர் அர்ச்சனையோடு, மஹாதீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

