ADDED : நவ 23, 2026 06:27 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்:
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 101வது பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு ஆகிய பகுதிகளில் உள்ள சமிதிகளில், சங்கீர்த்தனம், புஷ்பாஞ்சலி ஆகியவை நடந்தன.
மேட்டுப்பாளையம் கோ ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் சமிதியில் காலை 5:30 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நாம சங்கீர்த்தனம், புஷ்பாஞ்சலி ஆகியவை நடந்தன. அன்னபூரணிபேட்டை சமிதியில், 7:00 மணிக்கு கொடியேற்றமும், அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நாராயண சேவை, வஸ்திர தானம் ஆகியவை நடந்தன.
ஆலாங்கொம்பில் உள்ள பஜனை மடத்தில் சிறப்பு பஜனை நடந்தது. காரமடை வித்யா விகாஸ் பள்ளியில் பஜனையும், குமரன் குன்று அருகே உள்ள முதியோர் இல்லத்தில் பஜனையும் நடந்தது. ஒவ்வொரு சமிதியிலும், பக்தர்களுக்கு பிரசாதம், அறுசுவை உணவு வழங்கப்பட்டன.
