/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஸ்கோர்சில் தெரு நாய்கள் சிறுவனை கடித்ததால் அச்சம்
/
ரேஸ்கோர்சில் தெரு நாய்கள் சிறுவனை கடித்ததால் அச்சம்
ரேஸ்கோர்சில் தெரு நாய்கள் சிறுவனை கடித்ததால் அச்சம்
ரேஸ்கோர்சில் தெரு நாய்கள் சிறுவனை கடித்ததால் அச்சம்
ADDED : அக் 18, 2024 11:19 PM

கோவை : ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றிதிரியும் தெரு நாய், சிறுவனை கடித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏராளமானோர் நடைபயிற்சி செல்லும் இங்கு, 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உலா வருகின்றன. அதனை கண்டு பொதுமக்கள், மாணவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், இங்குள்ள தாமஸ் பார்க் பகுதியில் பெற்றோருடன் நடந்து சென்ற சிறுவனை, அங்கு சுற்றிதிரிந்த தெரு நாய் திடீரென வந்து, காலில் கடித்து உள்ளது. ஏற்கனேவே அச்சம் அடைந்துள்ள மக்களுக்கு, இது மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன், அங்கு சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன் ரேபீஸ் பாதித்து, கோவையில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

