/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அஞ்சலக செயல்பாடு கண்டறிய பள்ளி குழந்தைகள் நேரில் 'விசிட்'
/
அஞ்சலக செயல்பாடு கண்டறிய பள்ளி குழந்தைகள் நேரில் 'விசிட்'
அஞ்சலக செயல்பாடு கண்டறிய பள்ளி குழந்தைகள் நேரில் 'விசிட்'
அஞ்சலக செயல்பாடு கண்டறிய பள்ளி குழந்தைகள் நேரில் 'விசிட்'
ADDED : ஜன 08, 2025 11:03 PM

வால்பாறை, ; அஞ்சலக செயல்பாடுகள் குறித்து, பள்ளிக்குழுந்தைகள் நேரில் கண்டறிந்தனர்.
பள்ளி மாணவர்களும் அஞ்சலக செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில், அவ்வப்போது, அங்கு சென்று பல்வேறு தகவல்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
வால்பாறை அடுத்துள்ளது பழைய வால்பாறை. இங்குள்ள அக் ஷரா பிரைமரி நர்சரி பள்ளியில் படிக்கும் குழந்தைகள், அஞ்சல செயல்பாடு குறித்து நேரில் கண்டறிய, நேற்று பள்ளி முதல்வர் சுமதி தலைமையில், வால்பாறை நகரில் உள்ள அஞ்சலகத்திற்கு நேற்று காலை வந்தனர்.
பள்ளி குழந்தைகள் மத்தியில் போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி பேசியதாவது: அஞ்சலகத்தில் போஸ்ட் கார்டு, தபால்தலை, சேமிப்பு கணக்கு, இன்சூரன்ஸ், ரயில்வே முன் பதிவு, ஆதார் பதிவு உள்ளிட்ட சேவைகள் வாடிக்கையாளர்கள் வசதிக்காக சிறப்பாக செயல்படுகின்றன.
மாணவர்கள் விரும்பினால் ஆசிரியரின் பிறந்த நாளில் கூட அவரது புகைப்படத்தை தபால்தலையில் பதிவு செய்து, ஆசிரியர்களுக்கு பரிசாக வழங்கலாம். உங்களுக்காக சேவை செய்ய நாங்க ரெடி, அதே போல் நீங்களும் சிறுவயது முதலே சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாயிலாக அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்பெறும் வகையில் பாரத பிரதமர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர்ந்து நீங்களும் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.