/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி 'சூழல் மன்றம்' சிறக்க ஆசிரியருக்கு விழிப்புணர்வு
/
பள்ளி 'சூழல் மன்றம்' சிறக்க ஆசிரியருக்கு விழிப்புணர்வு
பள்ளி 'சூழல் மன்றம்' சிறக்க ஆசிரியருக்கு விழிப்புணர்வு
பள்ளி 'சூழல் மன்றம்' சிறக்க ஆசிரியருக்கு விழிப்புணர்வு
ADDED : டிச 31, 2024 04:52 AM
பள்ளிகளில் 'சூழல் மன்ற' செயல்பாடுகளை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப்பயிற்சி வழங்குவது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனி நபரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் செயல்படுத்திவரும், 'மிஷன் லைப்' திட்டம் ஏற்படுத்தி வருகிறது.
பாலிதீன் தவிர்த்தல், பொது இடங்களில் குப்பை போடுவதை தவிர்த்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல் போன்ற அடிப்படை ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியரை உள்ளடக்கி சூழல் மன்றங்களை உருவாக்க, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இவற்றின் வாயிலாக, மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு, போட்டிகள், களப்பயிற்சி உள்ளிட்டவற்றைக் கற்றுக் கொடுக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. தனியார் சுற்றுச்சூழல் அமைப்புகள் இதற்கு உதவத்தயாராக உள்ளன.
தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினர் காளிதாசன் கூறுகையில், ''சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை பள்ளி மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க சூழல் மன்றங்கள் பேருதவி புரியும். ஆனால், அவற்றின் செயல்பாடுகள் உரிய முறையில் இல்லை. சூழல் மன்றங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு வழங்குவதற்கான பரிந்துரையை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க உள்ளோம்,'' என்றார்.
- நமது நிருபர் -