/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' சார்பில் ஜன. 3 , 4ல் பள்ளி வழிகாட்டி-26 நிகழ்ச்சி
/
'தினமலர்' சார்பில் ஜன. 3 , 4ல் பள்ளி வழிகாட்டி-26 நிகழ்ச்சி
'தினமலர்' சார்பில் ஜன. 3 , 4ல் பள்ளி வழிகாட்டி-26 நிகழ்ச்சி
'தினமலர்' சார்பில் ஜன. 3 , 4ல் பள்ளி வழிகாட்டி-26 நிகழ்ச்சி
ADDED : டிச 25, 2025 05:01 AM
கோவை: 'தினமலர்' நாளிதழ் சார்பில், கோவையில் வரும் ஜன. 3 மற்றும் 4ல் பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மாணவ - மாணவியரின் கல்விக்கு வழிகாட்டியாய் எப்போதும் துணை நிற்பது 'தினமலர்' நாளிதழ். எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனத்துடன் இணைந்து, வரும் ஜன. 3, 4ம் தேதிகளில், கோவையில் பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது .
பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில், இவ்விரு நாட்களும் காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள மிகச்சிறந்த பள்ளிகள், தங்களது பள்ளியின் சிறப்பை பெற்றோருக்கு விளக்கும் வகையில் ஒரே கூரையின் கீழ் அரங்குகள் அமைக்கின்றன.
எந்தெந்த பள்ளியில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன, எத்தகைய கல்வி முறை கற்பிக்கப்படுகிறது, பாடக்கல்வி மட்டுமின்றி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனித்திறமைகளை வளர்க்கும் கல்வி கூடங்கள் எவை என்பதை அறியலாம்.
தங்களது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு, சிறந்த பள்ளியை தேர்ந்தெடுக்க பள்ளி வழிகாட்டி சிறந்த சாய்ஸ். இப்போதே காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஜன. 3,4ம் தேதிகளில் நிகழ்ச்சியில் பங்கேற்று, அரங்கிலேயே ப்ரீ கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன் நேஷனல் மாடல் குரூப் ஆப் ஸ்கூல்ஸ், மான்செஸ்டர் இன்டர்நேஷனல் ஸ்கூல், அத்வைத் அகாடமி இணைந்து வழங்குகின்றன.

