/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்துப்பாளையத்தில் விபத்து பள்ளி மாணவன் மரணம்
/
குளத்துப்பாளையத்தில் விபத்து பள்ளி மாணவன் மரணம்
ADDED : ஏப் 30, 2025 12:15 AM
தொண்டாமுத்தூர்,; குளத்துபாளையத்தில், இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், படுகாயமடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குளத்துப்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன்,77 என்பவர், நேற்றுமுன்தினம், குளத்துப்பாளையத்தில் உள்ள தனியார் வங்கிக்கு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, தொண்டாமுத்தூர் மெயின்ரோட்டில், பொம்மணம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் தாரகேஷ்குமார்,16 என்பவர், தனது நண்பர் நித்தீஷ்,16 என்பவருடன் பைக்கில் வந்துள்ளார்.
சாலையை கடக்க முயன்ற கோவிந்தன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில், கோவிந்தன் கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தாரகேஷ்குமார் ஹெல்மெட் அணிந்திருந்ததால், லேசான காயம் ஏற்பட்டது. தாரகேஷ்குமாரின் பின்னால் அமர்ந்திருந்த நித்தீஷ் ஹெல்மெட் அணியாததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, காதில் இருந்து ரத்தம் வந்தது.
அருகில் இருந்தவர்கள், காயமடைந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நித்தீஷ், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் இருவரும், அஜ்ஜனூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.