UPDATED : அக் 19, 2026 04:20 PM
ADDED : அக் 19, 2026 04:16 PM

அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது.
பி.எஸ்.ஜி. மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியினர் 43.4 ஓவரில் 119 ரன் எடுத்தனர். எதிரணியின் ஆதித்யா 3 விக்கெட் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆர்.கே.எஸ். கல்வி நிலையம் பள்ளி அணியினர் 34.3 ஓவரில் 71 ரன் எடுத்து தோல்வியடைந்தனர்.
எதிரணியின் முகமது ஹாலித் 4, சச்சின் 3 விக்கெட் எடுத்தனர். வெற்றி பெற்ற அணியினரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
