/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரமற்ற கழிப்பிடத்தால் பள்ளி மாணவர்கள் தவிப்பு
/
சுகாதாரமற்ற கழிப்பிடத்தால் பள்ளி மாணவர்கள் தவிப்பு
சுகாதாரமற்ற கழிப்பிடத்தால் பள்ளி மாணவர்கள் தவிப்பு
சுகாதாரமற்ற கழிப்பிடத்தால் பள்ளி மாணவர்கள் தவிப்பு
ADDED : பிப் 18, 2025 10:01 PM
வால்பாறை; அரசு பள்ளியில் சுகாதாரமற்ற கழிப்பிடத்தால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் தற்போது, 473 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் பயன்பாட்டிற்காக பள்ளி வளாகத்தில், 5 கழிப்பிடங்கள் உள்ளன.
பள்ளி மாணவர்களை தவிர, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். ஆனால், பள்ளியில் உள்ள கழிப்பிடம் போதிய பராமரிப்பில்லாமல், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால், இந்த பள்ளி மாணவர்களும், பிற பள்ளிகளிலிருந்து தேர்வு எழுத வரும், மாணவ, மாணவிகளும், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெற்றோர்கள் கூறியதாவது:
பள்ளியில் துாய்மை பணியாளர்கள் யாரும் இல்லாத நிலையில், கழிப்பறையை சுத்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, வாரம்தோறும் நகராட்சி சார்பில், கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும். பொதுத்தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக கழிப்பிடத்தை சுத்தம் செய்ய நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜிடம் கேட்டபோது, ''கழிப்பிடத்தை பயன்படுத்தும் மாணவர்கள், பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி, சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியில் துாய்மை பணியாளர்கள் இல்லாத நிலையில், சொந்த செலவில் கழிப்பிடத்தை பராமரிக்கும் பணி செய்து வருகிறோம். நகராட்சி அதிகாரிகள் மனசு வைத்தால், கழிப்பிடம் சுகாதாரமான முறையில் பராமரிக்க முடியும். மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கூடுதல் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்,'' என்றார்.