/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி, தன்னார்வ அமைப்புகள் பழங்குடியின மக்களுக்கு உதவி
/
பள்ளி, தன்னார்வ அமைப்புகள் பழங்குடியின மக்களுக்கு உதவி
பள்ளி, தன்னார்வ அமைப்புகள் பழங்குடியின மக்களுக்கு உதவி
பள்ளி, தன்னார்வ அமைப்புகள் பழங்குடியின மக்களுக்கு உதவி
ADDED : அக் 28, 2024 11:38 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழங்குடியின மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மற்றும் ஸ்ரீ ராமஜெயம் அறக்கட்டளை சார்பில், பழங்குடியின மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவர்கள், இனிப்பு, காரம், பயன்படுத்தக்கூடிய துணிகள் ஆகியவற்றை பள்ளிக்கு கொண்டு வந்து, ஆழியாறு பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள், ஸ்ரீ ராமஜெயம் அறக்கட்டளையினர், ஆழியாறு பழங்குடியின மக்களுக்கு வழங்கினர். அறக்கட்டளை செயலர் சுகுமார், சேவை செய்வதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் விளக்கினார். பள்ளி செயலர் ரமேஷ் ராஜ்குமார், தாளாளர் சாந்திதேவி, நிர்வாக இயக்குனர் ரிதன்யா, முதல்வர் சந்திராவதி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி கருப்புசாமி அறக்கட்டளை சார்பில், சர்க்கார்பதி, நாகரூத்து பழங்குடியின மக்களுக்கு, தீபாவளியையொட்டி, புத்தாடை, புத்தகங்கள், இனிப்புகள், காரம் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை இயக்குனர்கள் விக்னேஷ், சாந்த மீனாள், அறங்காவலர்கள் பலர் பங்கேற்றனர்.
*ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தில், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. அதில், மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டும், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.