ADDED : செப் 10, 2026 06:14 PM
கோவை: பள்ளி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பை மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டி பி.ஆர்.எஸ். மைதானத்தில் நேற்று துவங்கி, வரும் 14 வரை நடக்கிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 250 பேர் பங்கேற்றுள்ளனர்.
10 மீ., ஏர் ரைபிள், பீப் சைட், ஓபன் சைட், பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. போலீஸ் கமிஷனர் கண்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். எஸ்.டி.ஏ.டி., மண்டல முதுநிலை மேலாளர் அருணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாவட்ட அளவிலான கோ கோ போட்டிகள் தியாகி என்.ஜி.ஆர்., பள்ளியில் நேற்றும், இன்றும் நடக்கிறது. மாணவர் பிரிவில், 58 அணிகளும், மாணவியர் பிரிவில் 40 அணிகளும் பங்கேற்றுள்ளன.
மாணவர்களுக்கான போட்டியில், தியாகி என்.ஜி.ஆர்., பள்ளி அணி 11–1 என்ற புள்ளிகளில் மருதமலை தேவஸ்தானம் பள்ளி அணியை வென்றது.
டிரினிட்டி பள்ளி அணி 12–2 புள்ளிகளில் எம்.டி.என்., பள்ளி அணியையும், கே.பி.எம்., அணி 13–7 புள்ளிகளில் வடகோவை மாநகராட்சி பள்ளி அணியையும், பி.எஸ்.ஜி.ஆர்., கே பள்ளி அணி, 8–7 புள்ளிகளில் வித்யா மந்திர் பள்ளி அணியையும் வென்றன.
