ADDED : அக் 25, 2026 03:47 PM
அன்னுார்: ஒட்டர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று (அக்.,25) நடந்தது.
மாணவ, மாணவியர், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை பயன்படுத்தி, பல்வேறு வகையான உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தினர். வட்டார கல்வி அலுவலர் இருதய மரிய ஜோசப், தலைமையாசிரியை சுமதி, முன்னாள் தலைமை ஆசிரியர் விஸ்வநாதன், சமூக வளர்ச்சிக்கான மையத்தின் தலைவர் டாக்டர் சுஜா ஆகியோர் பார்வையிட்டனர். சிறந்த உணவுகளை தயாரித்து வந்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் பேசுகையில், ‘பாரம்பரிய உணவுகள் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதன் வாயிலாக, ஆரோக்கியமாக வாழலாம். துரித உணவுகளை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும்’ என்றனர். அசோக் லேலேண்ட் பவுண்டேஷன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.
