/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலேசியாவில் அறிவியல் கண்காட்சி அரசூர் பள்ளி மாணவர்கள் தேர்வு
/
மலேசியாவில் அறிவியல் கண்காட்சி அரசூர் பள்ளி மாணவர்கள் தேர்வு
மலேசியாவில் அறிவியல் கண்காட்சி அரசூர் பள்ளி மாணவர்கள் தேர்வு
மலேசியாவில் அறிவியல் கண்காட்சி அரசூர் பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : ஆக 23, 2025 02:48 AM

கோவை:மலேசியாவில் நடைபெறும் சர்வதேச அறிவியல் கண்காட்சி இறுதிப்போட்டிக்கு, கோவை அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, ஐந்து மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
இப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் கூறியதாவது:
சர்வதேச அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில், பல்வேறு நாட்டை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய கருவிகள் இடம் பெற்றுள்ளன.
எங்கள் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளன. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையிலும், 'ஸ்டெம் லேப்' பயன்படுத்தி வருகிறோம்.
8ம் வகுப்பு மாணவர்கள் ஐசக் ஜெபக்குமார் மற்றும் மருதீஷ், 9ம் வகுப்பு மாணவர் சங்கரா ஆகியோர் 'டிரான்சிஸ்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய ப்ளூடூத் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய தீயணைப்பு 'ரோபோ' மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் கவின், ரித்தீஷ் ஆகியோர் 'டிரான்சிஸ்டர்'களை பயன்படுத்தி, 'நீர்மட்ட அளவை கண்டறியும் கருவி' ஆகியவற்றை வடிவமைத்தனர். இம்மாணவர்களின் கண்டுபிடிப்புகள், மலேசியாவில் நடைபெறும் ஐஇஇஇ (இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ்) அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்கின்றன. நன்கொடையாளர்கள் மூலம் ரூ.1,50,000 செலவில் மலேசியா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.