/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்காட் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
ஸ்காட் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : டிச 01, 2025 05:38 AM

தொண்டாமுத்தூர்: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க கோவை கிளையின், 14வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி, ஓணாப்பாளையத்தில் உள்ள வெஸ்டர்ன் வேலி ரிசார்ட்டில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஜேம்ஸ் டேனியல், பொருளாளர் மோகன்தாஸ், அக்கவுன்டன்ட் ஜஸ்டிஸ் பிரேம்சன், கல்லூரியின் முன்னாள் முதல்வர் எட்வர்ட் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் கோவை கிளை தலைவர் நடராஜன், செயலாளர் மோகன் கனககுமார், பொருளாளர் ராம் விஜி மற்றும் கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பில், முன்னாள் மாணவர்கள், மற்றும் பேராசிரியர்கள் தங்கள் கல்லூரி கால அனுபவங்கள், மறக்க முடியாத நிகழ்வுகள், தற்போதைய வாழ்க்கை குறித்து பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து, கல்லூரியின் வரலாறு குறித்த வினாடி - வினா போட்டி, விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

