UPDATED : ஆக 18, 2026 08:20 PM
ADDED : ஆக 18, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
கோவை: சிரவையாதினம் கவுமார மடாலயத்தில் ஓலைச்சுவடிப் பயிற்சி நடந்தது.
சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகளின் அருளாணையின்படி பேராசிரியர் கோவைமணி ஓலைச்சுவடிகளிலுள்ள பழங்கால தமிழ் எழுத்துக்களை புரிந்துகொள்ளுதல், உச்சரித்தல், அதை தற்போதைய நடைமுறைக்கு மாற்றுதல், பின் அதை கோர்வையாக படிக்கும் நடைமுறை பற்றி விளக்கமளித்தார். கல்லுாரி மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
