/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்'
/
புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்'
ADDED : பிப் 19, 2025 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம், எம்மேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சீமான், 52, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் கடையில், சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானதை தொடர்ந்து, 35 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், சீமானை கைது செய்தனர்.
தொடர்ந்து, போலீசார் சார்பில் கிணத்துக்கடவு உணவு பாதுகாப்பு அதிகாரி பாலசுப்ரமணியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்காக, போலீசார் முன்னிலையில் மளிகை கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

