/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2ம் போக நெல் சாகுபடிக்கு விதை நெல் துாவும் பணி தீவிரம்
/
2ம் போக நெல் சாகுபடிக்கு விதை நெல் துாவும் பணி தீவிரம்
2ம் போக நெல் சாகுபடிக்கு விதை நெல் துாவும் பணி தீவிரம்
2ம் போக நெல் சாகுபடிக்கு விதை நெல் துாவும் பணி தீவிரம்
ADDED : டிச 19, 2025 06:42 AM
ஆனைமலை: ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், இரண்டாம் போக நெல்சாகுபடிக்கு விதை நெல் துாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு ஆழியாறு அணையில் இருந்து பாசன நீர் வினியோகம் செய்யப்படுகிறது. இரு போகத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது, பழைய ஆயக்கட்டு பாசனத்தில், நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நடப்பாண்டு ஜூன் மாதம் சாகுபடி செய்யப்பட்ட நெல், அக். மாதத்தில் அறுவடை செய்யப்பட்டது.
முதல் போக சாகுபடி முடிந்த நிலையில், இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக ஒன்றரை மாதத்துக்கு முன், ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. விளைநிலத்தில் உழவு பணி மேற்கொண்டு, அதில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு விதை நெல் உலர்த்தி போட்டு, நாற்றங்கால் ஏற்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நெல் நாற்றங்காலுக்கு ஏற்ப, மேலாண்மை தொழில்நுட்பம் கடைபிடிக்கப்படுகிறது. இன்னும் சில வாரத்தில், நாற்றங்கால்ஏற்பட்டு அதனை நாற்று நடுவதற்காக பணி மேற்கொள்ளப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

