ADDED : செப் 27, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட பைக், கார்கள், சரக்கு வாகனங்கள் வரும் 29ம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
அவிநாசி ரோட்டில் உள்ள பி.ஆர்.எஸ். வளாக ஆயுதப்படை மைதானத்தில் காலையில் ஏலம் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர், இன்று காலை 10 மணிக்கு அசல் ஆதார் மற்றும் நகலுடன் வந்து, ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்தி டோக்கன் பெற வேண்டும்.
ஏலத்தில் எடுக்கும் வாகனங்களுக்கான முழுத்தொகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யையும் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனங்களை கோவை ஆயுதப்படை மைதானம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம் மற்றும் காரமடை போலீஸ் ஸ்டேஷனில் பார்வையிடலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
