/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
/
விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
ADDED : அக் 09, 2024 10:48 PM

கோவை: விமானத்தில் கடத்தி வரப்பட்ட, வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அபுதாபி -- கோவை இடையே வாரத்தில் மூன்று நாட்கள், விமான சேவை உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை 6:30 மணிக்கு அபுதாபியில் இருந்து, கோவைக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவரின் உடைமையில், ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 14 ஆயிரம் மதிப்புள்ள, வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த பயணியிடம் விசாரிக்கின்றனர்.