/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராவல் மண் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
/
கிராவல் மண் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
ADDED : அக் 28, 2024 11:45 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கிராவல் மண் கடத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையம், பருத்தியூர் பகுதியில், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலர் சரணவன் தலைமையிலான பறக்கும் படையினர், திடீர் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அரசுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதி இன்றி பொக்லைன் இயந்திரம் வாயிலாக, கிராவல் மண் அள்ளி, டிராக்டரில் விற்பனைக்கு கொண்டு செல்வதைக் கண்டறிந்தனர்.
அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கும் போது, டிரைவர்கள் இருவர் தப்பியோடினர். இதையடுத்து, கிராவல் மண் லோடுடன் இருந்த டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை, ஆழியாறு போலீஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.