/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டா நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த வாகனங்கள் பறிமுதல்
/
பட்டா நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த வாகனங்கள் பறிமுதல்
பட்டா நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த வாகனங்கள் பறிமுதல்
பட்டா நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜன 31, 2024 12:04 AM
ஆனைமலை:ஆனைமலை அருகே பட்டா நிலத்தில், அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த, மூன்று டிராக்டர்கள் பறிமுதல் செய்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனைமலை அருகே, திவான்சாபுதுாரில் மறைந்த நடராஜ் என்பவரது தோட்டத்தை, அவரது மகன் பூபதி பராமரித்து வருகிறார்.
இவரது பட்டா நிலத்தில், அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச்சென்ற, கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆய்வு செய்தார். அரசு அனுமதி பெறாமல், முறைகேடாக அனுமதியின்றி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், ஒரு யூனிட் கிராவல் மண்ணுடன் டிராக்டர் நிறுத்தப்பட்டு இருந்தது.
மேலும், மண் எடுப்பதற்கு தயார் நிலையில் இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஹிட்டாச்சி வாகனமும் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராவல் மண் அனுமதியின்றி எடுத்த, திவான்சாபுதுாரைச்சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் கவுதமன், 22, தோட்டத்தை பராமரித்து வரும் பூபதி, 35, ஆனைமலை மீனாட்சிபுரத்தைச்சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரமணன், 38, சேலத்தைச்சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் ஜான்மோகன், 29, ஆகியோரை பிடித்து ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள மீனாட்சிபுரத்தைச்சேர்ந்த, ஜெயப்பிரகாஷ், சுப்பேகவுண்டன்புதுார் கருப்புசாமி, திவான்சாபுதுார் தினகரன், சின்னப்பகவுண்டனுார் மலையாள பகவதி ஆகியோரை தேடி வருகின்றனர்.