ADDED : ஆக 23, 2026 06:20 PM
உடுமலை: ஒன்றிய அளவிலான கலைத்திருவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, மாணவ, மாணவியருக்கு ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குடிமங்கலம் சி.ஆர்.சி., அளவில், நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று, ஒன்றிய அளவிலான போட்டிக்கு ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு பெற்றுள்ளனர்.
பேச்சுப்போட்டியில், மகிமா ஜெர்லின், இவாஞ்சலின், கதை கூறுதல் மனிஷா, மாறுவேடப்போட்டி பிரதிக் ஷா, பாவனை நடிப்பு திலீப், நாட்டுப்புற பாடல் தனிப்பாட்டு அனுபிரிதிகா மற்றும் நாட்டுப்புற நடன குழுவினர் முதலிடம் பெற்றனர்.
வெற்றி மாணவ மாணவியரை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
