/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டப்பணி ஆணைக்குழுவில் பணியாற்ற வக்கீல்கள் தேர்வு
/
சட்டப்பணி ஆணைக்குழுவில் பணியாற்ற வக்கீல்கள் தேர்வு
சட்டப்பணி ஆணைக்குழுவில் பணியாற்ற வக்கீல்கள் தேர்வு
சட்டப்பணி ஆணைக்குழுவில் பணியாற்ற வக்கீல்கள் தேர்வு
ADDED : மார் 07, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியாற்ற, வக்கீல்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது.
இங்கு பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
வழக்கு சம்பந்தமாக, வக்கீல் வைத்து வாதிட வசதி இல்லாதவர்களுக்கு, இலவச சட்ட உதவி அளிப்பதற்காக, வக்கீல்கள் குழு நியமிக்கப்படுகின்றனர்.
25 வக்கீல்களை நியமிக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பம் பெறப்பட்டது. மொத்தம், 33 வக்கீல்கள் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் பட்டியல் வெளியிடப்படும்.