/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரவுண்டானாவில் 'செல்பி ஸ்பாட்'; சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
ரவுண்டானாவில் 'செல்பி ஸ்பாட்'; சுற்றுலா பயணியர் குதுாகலம்
ரவுண்டானாவில் 'செல்பி ஸ்பாட்'; சுற்றுலா பயணியர் குதுாகலம்
ரவுண்டானாவில் 'செல்பி ஸ்பாட்'; சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : மார் 19, 2025 08:37 PM

வால்பாறை; வால்பாறை அருகே, நெடுஞ்சாலைத்துறை ரவுண்டானாவில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது.
வால்பாறையின் இயற்கை அழகையும், வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும், சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். அட்டகட்டி, கவர்க்கல் வியூபாயின்ட், நல்லமுடி காட்சி முனை, சின்னக்கல்லார், சோலையாறு அணை உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
இது தவிர, தேயிலை காட்டில் முகாமிடும் யானை, காட்டுமாடு, மலைப்பாதையில் உலா வரும் வரையாடு, சிங்கவால் குரங்குகளையும் சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப்பாதையில், 40 கொண்டை ஊசி வளைவுகளிலும், அரிய வகை வனவிலங்குகளின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாணிக்கா எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, தனியார் எஸ்டேட் பங்களிப்பில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில் 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நின்று, சுற்றுலா பயணியர் 'செல்பி' எடுத்து செல்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலா பயணியரை மகிழ்விக்க கொண்டை ஊசி வளைவுகளில் புதுமையான காட்சிகளை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரவுண்டானா முழுவதிலும், பூச்செடிகள் வைக்கப்படுவதோடு, அதை பராமரிக்கும் பணியையும், அந்தந்த எஸ்டேட் நிர்வாகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அனைவரும் கவரும் வகையில், ஜக்கில் இருந்து கப் அண்டு ஷாசரில் டீ உற்றுவது போன்று 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.