/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுகர்வோர் விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கு
/
நுகர்வோர் விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : ஜன 30, 2025 11:11 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரியில், வணிகவியல் நிதியியல் துறை, நுகர்வோர் விழிப்புணர்வு மன்றம், ஐ.ஐ.சி., தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பு மற்றும் பொள்ளாச்சி நுகர்வோர் அமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
'நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்குக்கு, கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன் தலைமை வகித்தார். முன்னதாக, துறைத் தலைவர் அகிலாண்டேஸ்வரி வரவேற்றார்.
தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பு பொதுச் செயலாளர் பிரதீப்குமார், நுகர்வோரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து பேசினார். பொள்ளாச்சி நுகர்வோர் அமைப்பு தலைவர் இந்திராணி, பேராசிரியர்கள் அம்சவேணி, கோகிலவிழி, ரேணுகா, பிரேம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.