/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேருக்குதான் மூத்தோர் தடகளம்: திறமையிலோ இளையோருக்கும் சளைக்காத ஓட்டம்
/
பேருக்குதான் மூத்தோர் தடகளம்: திறமையிலோ இளையோருக்கும் சளைக்காத ஓட்டம்
பேருக்குதான் மூத்தோர் தடகளம்: திறமையிலோ இளையோருக்கும் சளைக்காத ஓட்டம்
பேருக்குதான் மூத்தோர் தடகளம்: திறமையிலோ இளையோருக்கும் சளைக்காத ஓட்டம்
ADDED : செப் 26, 2024 11:47 PM
கோவை : மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நடந்த மூத்தோருக்கான தடகள போட்டிகளில் வயதானாலும் 'நாங்கள் சளைத்தவர்கள் அல்ல' என்ற வெற்றி முனைப்புடன் ஓடினர்.
கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் மூத்தோருக்கான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், 30 முதல், 85 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் என, 463 பேர் பங்கேற்றனர். நடை பயண போட்டி, ஓட்டம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றன.
அதன்படி, 85 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் பிரிவு, குண்டு எறிதல், வட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் ஆறுமுகம் முதல் பரிசை தட்டினார். 75 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் குண்டு எறிதலில் ஜோசப், வட்டு எறிதலில் ராஜேந்திரன், சங்கிலி குண்டு எறிதலில் திருமூர்த்தி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.
அதேபோல், 70 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில், குண்டு எறிதலில் சிவதாஸ், வட்டு எறிதலில் பழனிசாமி, சங்கிலி குண்டு எறிதலில் ஆறுமுகம், 60 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் குண்டு மற்றும் வட்டு எறிதலில் கோபால்சாமி, சங்கிலி குண்டு எறிதலில் ராஜகோபாலன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
மேலும், 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு குண்டு எறிதலில் தாமஸ் சாமுவேல், வட்டு எறிதலில் ரசாக், சங்கிலி குண்டு எறிதலில் ஜெயராம் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 50 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் குண்டு மற்றும் சங்கிலி குண்டு எறிதலில் முரளி முதலிடம் பிடித்தார்.
பெண்களுக்கான, 75 வயதுக்கு மேற்பட்டோர் குண்டு எறிதலில் பவானி, நாகரத்தினம்(65), தனபாக்கியம்(55), சண்முகாதேவி(50), சந்தான லட்சுமி(45), பவானீஸ்வரி(40), கிருத்திகாஸ்ரீ(35) ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும், 70 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் சரஸ்வதி முதல் பரிசு வென்றார். 3 கி.மீ., நடை போட்டியில் சரஸ்வதி, கனகவேணி(65), பாப்பாத்தி(60), சுகி(50), சங்கீதா(45), பரமேஸ்வரி(40), ராமலட்சுமி(35), சுதாராணி(30) ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
தொடர்ந்து, 100 மீ., உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சங்க செயலாளர் வேலுச்சாமி, பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.