/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடக்கிறது சென்டைஸ் கபடி, கோ-கோ போட்டி
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடக்கிறது சென்டைஸ் கபடி, கோ-கோ போட்டி
ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடக்கிறது சென்டைஸ் கபடி, கோ-கோ போட்டி
ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடக்கிறது சென்டைஸ் கபடி, கோ-கோ போட்டி
ADDED : பிப் 22, 2024 05:50 AM

கோவை: இன்ஜி., மாணவர்களுக்கான மண்டல அளவிலான கோ கோ மற்றும் கபடி போட்டி, பச்சாபாளையம் ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில், இரண்டு நாட்கள் நடக்கிறது.
சென்டைஸ் (கோவை, ஈரோடு,நீலகிரி, திருப்பூர் இன்டர் இன்ஜி., விளையாட்டு போட்டிகள்) சார்பில், 13ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் கோவையில் நடக்கின்றன.
இதன், மாணவர்கள் பிரிவு கபடி மற்றும் கோ கோ போட்டிகள், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் நேற்று நடந்தது; இன்றும் நடக்கிறது.
போட்டியை கல்லுாரி முதல்வர் பவுல்ராஜ் துவக்கி வைத்தார். ஐ.டி., துறை தலைவர் சுரேஷ்குமார், உடற்கல்வி இயக்குனர் வேலுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
கபடி
முதல் போட்டியில், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி 32 - 30 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரியையும், இரண்டாம் போட்டியில் ஈரோடு செங்குந்தர் இன்ஜி., கல்லுாரி அணி, 26 - 23 என்ற புள்ளிக்கணக்கில், ஈரோடு நந்தா இன்ஜி., கல்லுாரியையும் வீழ்த்தின.
கோ-கோ
முதல் போட்டியில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி அணி 21 - 20 என்ற புள்ளிக்கணக்கில், ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியையும், இரண்டாம் போட்டியில் பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி அணி 21 - 18 என்ற புள்ளிக்கணக்கில், அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியையும், மூன்றாம் போட்டியில், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி 17 - 16 என்ற புள்ளிக்கணக்கில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியையும் வீழ்த்தின.