sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'தனித்தனி விடுதிகளுக்கு தனியாக பதிவு வேண்டும்'

/

 'தனித்தனி விடுதிகளுக்கு தனியாக பதிவு வேண்டும்'

 'தனித்தனி விடுதிகளுக்கு தனியாக பதிவு வேண்டும்'

 'தனித்தனி விடுதிகளுக்கு தனியாக பதிவு வேண்டும்'


ADDED : பிப் 19, 2026 05:39 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பள்ளி, கல்லுாரிகளில், விடுதிகள் தனித்தனி இடங்களில் இருப்பின், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவும் தனியாக வைத்திருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா அறிவுறுத்தியுள்ளார்.

சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி விடுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாணவர் விடுதிக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு இருந்தது. வளாகத்திற்கு வெளியில் தனியாக இருந்த மாணவிகள் விடுதிக்கு பதிவு இல்லை. சுகாதாரமும் சரியாக பின்பற்றப்படவில்லை என, மாணவிகள் விடுதிக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''பள்ளி, கல்லுாரிகள் எதுவானாலும் விடுதிகளுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு அவசியம். ஒரே வளாகத்திற்குள் மாணவர்கள், மாணவிகள் விடுதி அமைந்து இருப்பின் ஒரு பதிவு போதும்.

வெவ்வேறு இடங்களில் இருப்பின் தனித்தனி பதிவு வேண்டும். உணவு கையாள்வது எனில் தண்ணீர் உட்பட அனைத்து வகை உணவு தயாரிப்பு, வாங்கி விற்பனை செய்வது, விற்பனை, வினியோகம், பரிமாறுதல், வியாபாரம் என அனைத்தும் பொருந்தும்.

தனியார் கல்லுாரியில் ஆய்வு மேற்கொள்ளும் போது மாணவிகள் விடுதி, வளாகத்தின் வெளியில் தனியாக இருந்தது. ஆனால், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு இல்லை; இதனால், நோட்டீஸ் வினியோகிக்கப் பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us