தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிநீர் ஆதாரத்தை துார்வாரும் பணிகள் தீவிரம்!  வறட்சி நிவாரண நிதி ரூ.34 லட்சம் ஒதுக்கீடு

குடிநீர் ஆதாரத்தை துார்வாரும் பணிகள் தீவிரம்!  வறட்சி நிவாரண நிதி ரூ.34 லட்சம் ஒதுக்கீடு

குடிநீர் ஆதாரத்தை துார்வாரும் பணிகள் தீவிரம்!  வறட்சி நிவாரண நிதி ரூ.34 லட்சம் ஒதுக்கீடு


UPDATED : செப் 22, 2026 03:54 PM

ADDED : செப் 22, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 03:54 PM ADDED : செப் 22, 2026 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆழியாறு ஆற்றில் குடிநீர் ஆதாரங்களை ஆழப்படுத்தும் பணியில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணையிலிருந்து, கேரள மாநிலத்துக்கு ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆற்று நீரை ஆதாரமாக பயன்படுத்தி, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனர்.

அம்பராம்பாளையம் அருகே, பொள்ளாச்சி நகராட்சி, வழியோர கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்ளிட்ட 64 கிராமங்கள், பெரிய நெகமம், கிணத்துக்கடவு பேரூராட்சி பயன்பெறும் வகையில், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி கூட்டுக்குடிநீர் திட்டம்.

சூளேஸ்வரன்பட்டிக்கு என தனிக்கூட்டுக்குடிநீர் திட்டம், குளத்துாரில், 4 ஒன்றியங்கள், 295 கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்துார் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அனைத்தும், அப்போதைய மக்கள் தொகை அடிப்படையாக கொண்டு துவங்கப்பட்டன.

தற்போது, பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் சரிந்தது. இதனால், ஆற்றிலும் நீர் வரத்து குறைந்துள்ளதால், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆழியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஆழியாறு ஆற்றில், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தில் குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் வறட்சி நிவாரண நிதியாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, 58 கோடியே, 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், பொள்ளாச்சி பகுதிக்கு மட்டும், 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி வாயிலாக, ஆழியாறு ஆற்றில் குடிநீர் ஆதாரம் உள்ள அம்பராம்பாளையம், குளத்துார், வேட்டைக்காரன்புதுார் ஆகிய இடங்களில் கழிவுகளை அகற்றி துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக துார்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. கழிவுகள் அகற்றி துார்வாரப்படுகிறது. இதன் வாயிலாக குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆற்றை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்துவதால் குடிநீர் எடுக்கும் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வறட்சி காலத்தில் ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஆழப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தடையின்றி தண்ணீர் எடுக்கலாம்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us