/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வர் பிரச்னை பத்திரப்பதிவு பாதிப்பு
/
சர்வர் பிரச்னை பத்திரப்பதிவு பாதிப்பு
ADDED : ஜன 23, 2026 05:49 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியில் 'சர்வர்' பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவை எளிமைப்படுத்தவும், கூடுதல் சேவைகளை வழங்கவும் தற்போது உள்ள, 2.0 இணைய பக்கத்தை, 3.0 என, அரசு மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், 21ம் தேதி, இரவு 7:00 மணி முதல், நேற்று காலை, 11:00 மணி வரை அப்டேசன் பணிகள் நடக்கும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், நேற்று மதியம் வரை 'சர்வர்' பிரச்னை இருந்ததால், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் பத்திரப்பதிவு செய்ய வந்தோர் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், பத்திர எழுத்தர்களும் பாதிக்கப்பட்டனர்.

