தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘சர்வர்’ பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிப்பு

‘சர்வர்’ பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிப்பு

‘சர்வர்’ பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிப்பு


ADDED : நவ 25, 2026 06:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 06:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: பத்திரப்பதிவு செய்வதில், ‘சர்வர்’ பிரச்னை ஏற்பட்டதால், கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று, ‘சர்வர்’ பிரச்னையால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் பத்திரங்கள் முடித்த பின்பே, மற்ற பதிவுகள் செய்யும் நிலையில், நேற்று ஏற்பட்ட ‘சர்வர்’ பிரச்னை, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட நபர்கள் பத்திரப்பதிவு செய்ய இரவு வரை காத்திருந்தனர். உட்கார இருக்கையும் இல்லாததால் பலர் நின்று கொண்டே இருந்தனர். சிலர் அருகிலுள்ள கடைகள் மற்றும் பேக்கரிகளில் தஞ்சமடைந்தனர்.

பத்திர எழுத்தர்கள் கூறியதாவது:

பத்திரப்பதிவின் போது இடம் விற்பவர் மற்றும் வாங்குபவர் கை ரேகை பதிவது அவசியம். இன்று (நேற்று) முழுவதும் கைரேகை பதிவு இணைய பக்கத்தில் பதிவாகாமல் ‘சர்வர்’ பிரச்னை ஏற்பட்டது. இதனால், 50 முதல் 60 பத்திரங்கள் பதிவு செய்ய முடியாமல் போனது.

இதேபோன்று, ஏதாவது ஒரு பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. இதை சரி செய்ய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us