/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாலுகா ஆபீசில் குடியேறும் போராட்டம் ஒத்திவைப்பு
/
தாலுகா ஆபீசில் குடியேறும் போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : நவ 22, 2025 07:06 AM
அன்னுார்: அதிகாரிகள் உறுதி அளித்ததால், தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாச பாளையத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், சொந்த இடமும், வீடும் இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 31 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டும் பட்டா வழங்கவில்லை. இதற்காக 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
பட்டா கோரி அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நவ. 21ம் தேதி குடியேறும் போராட்டம் நடத்துவதாக சமூக ஆர்வலர் சதீஷ்குமார் தலைமையில் அப்பகுதி மக்கள் அறிவித்தனர்.
நேற்று தாசில்தார் யமுனா தலைமையில், வருவாய் ஆய்வாளர் குருநாதன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். இதில் ஏழு பேருக்கு ஒரு வாரத்திற்குள் பட்டா வழங்கப்படும். மற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி கலைந்து சென்றனர்.

