/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவா பாரதி பொது மருத்துவ இலவச ஆலோசனை முகாம்
/
சேவா பாரதி பொது மருத்துவ இலவச ஆலோசனை முகாம்
ADDED : ஜூலை 23, 2025 10:55 PM
கோவை; சேவா பாரதி தென் தமிழ்நாடு சார்பில், பொது மருத்துவ இலவச ஆலோசனை முகாம் வரும், 27ம் தேதி நடக்கிறது.
ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் உள்ள, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது. முகாமில் பொது மருத்துவம், மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவம், தோல் நல மருத்துவம், பொது மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவம், கண் நலம் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை நல அறுவை சிகிச்சை மருத்துவம் தொடர்பாக, பி.எஸ்.ஜி., மருத்துவமனை நிபுணர்களால், இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப் படுகிறது.
விபரங்களுக்கு, 98432 14439, 88700 02199 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.