/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மர்ம விலங்கு தாக்கி ஏழு ஆடுகள் பலி
/
மர்ம விலங்கு தாக்கி ஏழு ஆடுகள் பலி
ADDED : டிச 03, 2025 07:31 AM
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மொக்கை நகர் பகுதியை சேர்ந்தவர் துளசி மணி. இவர் பத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன் தினம் மாலை, அவரது வீட்டின் அருகே இருந்த தோட்டப் பகுதியில், மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள் அனைத்தும் திடீரென கத்தும் சத்தம் கேட்டது. அங்கு சென்று அவர் பார்த்த போது, 6 ஆடுகள் கழுத்தில் கடிப்பட்ட நிலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது. மேலும் இரண்டு ஆடுகள் காயங்களுடன், உயிருக்கு போராடியது.
அவற்றை மீட்டு கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அதில் ஒரு ஆடு இறந்தது.
இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தனர்.---

